பிரித்தானியாவில் வங்கி வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து!
பாங்க் ஆஃப் இங்கிலாந்து இன்று மற்றுமொரு வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பரவலான பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள 12 ஆவது அதிகரிப்பு இதுவாகும்.
நிதிச் சந்தைகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இருவரும் 0.25 சதவீத புள்ளிகள் 4.5% ஆக உயரும் என்று பரவலாக எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 2021 டிசம்பரில் வங்கி விகிதம் 0.1% ஆக இருந்தது. இந்நிலையில், கொவிட் நிலைமைகள், உக்ரைன் – ரஷ்ய போர் ஆகியவை பணவீக்க சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக எரிவாயுவிற்கான அதிகரிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமீப மாதங்களில் மொத்த எரிசக்தி செலவுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அளவை 10.1% ஆகக் காட்டியது. இது கடந்த 45 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலையாகும்.