நியூசிலாந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் வெளியிட்ட சிங்கப்பூர் பல்கலைக்கழகம்
ஏப்ரல் 17 ஆம் தேதி நியூசிலாந்தின் தெற்கு தீவில் நடந்த சாலை விபத்தில் பலியான மூவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (NUS) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பல்கலைக்கழகம், “துரதிர்ஷ்டவசமான விபத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
“அவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு கடினமான நேரம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க நாங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.இந்த துயரத்தின் போது எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன.” என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த மூன்று மாணவர்கள் – 21 வயதுடைய ஷெர்வின் சோங் ஷி யுன் மற்றும் யாங் சின்யு,24 வயதுடைய வின்சென்ட் லிம் ஜியா ஜுன் என அடையாளம் காணப்பட்டனர்.
ஏப்ரல் 17 அதிகாலையில், அவர்களது கேம்பர் வேன் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்ததில் உயிரிழந்தனர் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து தென்மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள ஜெரால்டின் நகருக்கு அருகில் மாநில நெடுஞ்சாலை 79 மற்றும் தே மோனா சாலை சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.