சிரியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெனரல் கமாண்ட் ஆசாத் ஹசன் அல்-ஷிபானி நியமனம்
சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் வெளியுறவு அமைச்சரை நியமித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ சிரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஆளும் ஜெனரல் கமாண்ட் ஆசாத் ஹசன் அல்-ஷிபானி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் சர்வதேச உறவுகளை நிறுவுவதற்கான சிரிய மக்களின் அபிலாஷைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வருகிறது” என்று புதிய நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷிபானி பற்றி உடனடியாக எந்த விவரமும் கிடைக்கவில்லை.
சிரியாவின் நடைமுறை ஆட்சியாளரான அஹ்மத் அல்-ஷாரா, அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து, ஐ.நாவின் சிரியா தூதுவர் மற்றும் மூத்த அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு விருந்தளிப்பது உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஷரா சர்வதேச தூதுவர்களுடன் இராஜதந்திர ரீதியில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார், புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதில் தனது முதன்மை கவனம் உள்ளது என்று கூறினார். புதிய மோதல்களில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.