பிரித்தானியாவில் ரயில்வே பாலத்துடன் மோதிய பேருந்து : 08 பேர் படுகாயம்!
பிரித்தானியாவில் ரயில்வே பாலத்தின் மீது இரட்ட மாடி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பேருந்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், இதில் காயமுற்ற 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக காயமுற்ற 08 பேருக்கும் ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)