வனுவாட்டு தீவை 2வது முறையாக உலுக்கிய நிலநடுக்கம் – 14 பேர் மரணம் – 200 பேர் காயம்
வனுவாட்டு தீவில் இரண்டாவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இதுவே மிக மோசமான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், முதல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் பல அவுஸ்திரேலியர்கள் இருப்பது தமக்கு தெரியும் என வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, செஞ்சிலுவைச் சங்கம் இன்று அதிகாலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 என்று தெரிவித்துள்ளது.
தகவல்தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளில் பரவலான சேதம் காரணமாக, உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளியிடுவது தடைபட்டுள்ளது மற்றும் தொலைபேசி சேவை தடைபட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ உதவி மற்றும் மீட்புக் குழு உள்ளிட்ட உதவிக் குழு ஒன்று தற்போது வனுவாட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.