இலங்கை: பிளாஸ்டிக்கின் தரத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்? PHI விளக்கம்
பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் (PHIU) உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள பல சில்லறை விற்பனை நிலையங்களில் PHIU சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
வரும் கல்வியாண்டு மற்றும் பண்டிகை காலத்துக்காக விற்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிய சோதனை நடத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு PHIU தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
பிளாஸ்டிக் பொருட்களில் ஒயின் கோப்பையின் (wine cup) அடையாளங்கள் உள்ளதா அல்லது அதன் அடிப்பகுதியில் ஐந்தாம் எண் உள்ளதா என்பதை உறுதி செய்து அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
மூன்று அம்புகளால் உருவாக்கப்பட்ட முக்கோணத்தின் உள்ளே 5 என்ற எண்ணைக் குறிக்கும் பாலிப்ரோப்பிலீன் (PP) மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக், நீடித்த, இலகுரக மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக உணவு கொள்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய அடையாளங்கள் இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்திய உபுல் ரோஹன, அவை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.