பிரான்ஸ் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமான வாடகை கார் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
Uber மற்றும் Bolt ஆகிய வாடகை கார் சேவை மேற்கொள்ளும் நிறுவனங்களே இந்த சேவையை ஆரம்பித்துள்ளன.
பெண்கள் தங்களுக்குரிய கார்களை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் சாரதிகளால் குறித்த கார்கள் ஓட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை கார்களை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் சரண்டல்களுக்கு உள்ளாகுவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)