இலங்கையில் மின் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு : பல தரப்பினரும் அதிருப்தி!
இலங்கையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேணுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நீர் மின் உற்பத்தி கூட உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ஏன் மக்களுக்கு பலன் தருவதில்லை என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதுள்ள நிலவரத்தை பொருத்து மின்கட்டணத்தை அதிக சதவீதம் குறைக்கலாம் என்று எதிர்வுக்கூறப்பட்டுள்ள நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)