இலங்கையில் சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை – இளைஞனின் மோசமான செயல்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் மோசடி செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தம்மை தொடர்பு கொண்ட நபரை இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி 05 இலட்சத்திற்கு மேல் கணக்கு காட்டியுள்ளார் இந்த இளைஞன்.
இதனடிப்படையில், வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோசடியில் சிக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





