ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு – புதிய பிரதமர் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மிஷேல் பார்னியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பிரெஞ்சு ஜனாதிபதி, மிஷேல் பார்னியரை நாட்டின் பிரதமராக நியமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதன்படி, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்வது இதுவே முதல்முறை.

எவ்வாறாயினும், 2027 ஆம் ஆண்டு வரை தான் பதவியில் நீடிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிஷேல் பார்னியர் பிரதமராக இருந்த குறுகிய காலத்திலேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக பிரான்ஸ் ஜனாதிபதி முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி