மே 9 கலவரத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை – கெமுனு விஜேரத்ன!
கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்றை சம்பவத்தில் 32 பேருந்துகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நட்டஈடு வழங்கப்படாமையால் பஸ் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், இதுவரை பஸ் ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நிவாரணத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்த போதிலும்இ அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அவ்வாறான திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.