இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பிரதமர் மோடியின் கொள்கைகளை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி

15வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி ஆகியவற்றை பாராட்டினார்.

வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசிய புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

15வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்.எம்.இ) ஏற்ற “நிலையான சூழல்களை” உருவாக்குவதில் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டம் சிறப்பான பாராட்டுக்குரியது.

ரஷ்யாவின் இறக்குமதி மாற்று திட்டத்திற்கும், இந்தியாவின் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சிக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை நிறுவ வேண்டும் என்பதில் ரஷ்யா விருப்பம் கொண்டுள்ளது. இந்தியாவின் தலைமை, தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளூர் ரஷ்ய உற்பத்தியாளர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். சந்தையில் இருந்து வெளியேறிய மேற்கத்திய வணிக முத்திரைப் பொருட்களுக்குப் பதிலாக புதிய ரஷ்ய பொருட்கள் எழுச்சி பெற்றுள்ளன.

எங்களைப் பொறுத்தவரை, எங்கள் இறக்குமதி மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாக இது மிகவும் முக்கியமானது. புதிய ரஷ்ய வணிக முத்திரைப் பொருட்களின் தோற்றம் தானாக முன்வந்து எங்கள் சந்தையை விட்டு வெளியேறிய மேற்கத்திய நிறுவனங்களை மாற்ற உதவுகிறது. எங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் பொருட்களில் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர்.

ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளில் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்யுமாறு எனது பிரிக்ஸ் சக நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை வழிநடத்தும் எங்கள் பிரேசிலிய சகாக்களின் கவனத்திற்கு இதை நிச்சயமாக கொண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி