செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் பிரையன் பென்னட் மட்டும் நிலைத்து 21 ஆடி ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 12.4 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி ஆட்டமிழந்தது . பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி சுபியான் முகீம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 58 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது . இதனால் 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது .

உமைர் யூசுப் 22 ரன்களும் , சைம் அயூப் 36 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது .

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி