இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

சாத்தான் II ஏவுகணையை பயன்படுத்த திட்டமிடும் ரஷ்யா: நாளுக்கு நாள் உக்கிரமடையும் மோதல்!

ரஷ்யா இன்னும் தனது சாத்தான் II ஏவுகணையை போரில் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சாத்தான் II என்ற புனைப்பெயர் கொண்ட RS-28 Sarmat ஏவுகணை, பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது மற்றும் அமெரிக்கா அல்லது ஐரோப்பா வரை ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

ஒரே குண்டுவெடிப்பில் முழு இங்கிலாந்தையும் அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக இந்த ஏவுகணை பயன்படுத்தப்படவில்லை. தற்போது அணுவாயுத போர் குறித்த புதிய திட்டத்தில் புட்டின் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்த ஏவுகணையை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்கா வழங்கிய ATACMS மற்றும் பிரிட்டிஷ் தயாரித்த Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல்களை நடத்தியதால் இந்த ஏவுகணை பற்றிய கரிசனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்