இலங்கையின் புதிய அமைச்சர்களுக்கு வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களையே இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பயன்படுத்துவார்கள் என அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கமான மற்றும் சொகுசு இல்லாத வாகனம் வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அதற்கமைய, புதிய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனமாக ஏதாவது ஒரு வாகனம் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு புதிய உத்தியோகபூர்வ வாகனங்கள் கிடைக்காது எனவும், கடந்த அரசாங்க அமைச்சர்கள் ஒப்படைத்த உத்தியோகபூர்வ வாகனங்கள், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
159 உறுப்பினர்கள் அரசாங்க வேலைகளுக்காக நீண்ட தூரம் தமது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர்களுக்கு V8 போன்ற சொகுசு கார்கள் வழங்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்.
பராமரிப்பதற்கு சிரமமான 344 அரச வாகனங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். V8 போன்ற சொகுசு கார்கள் இருப்பதாகவும், அவற்றை பராமரிக்க அரசபஙடகதட அதிக பணம் செலவழிப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் உறுப்பினர்களுக்கு தேவையான வாகனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் போது எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணியாக கருதப்படும் அவர், எவருக்கும் எரிபொருள் அதிகம் செலவாகும் சொகுசு வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏலத்தில் கிடைத்த பணம் போதவில்லை என்றால், ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சில வாகனங்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.