இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

தனது உலக சாதனையை தானே முறியடித்து சாதனை படைத்த எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் மேலும் பணக்காரராகி தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

அதாவது மஸ்க்கின் நிகர மதிப்பு 347.8 பில்லியன் டொலர்களாகும்.

Bloomberg Billionaires Index வெளியிட்ட தகவலுக்கமைய, டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 2021ஆம் ஆண்டுநவம்பர் மாதம் 340 பில்லியன் டொலரை தாண்டியுள்ளனர்.

அதன்பிறகு, அவர் படைத்த சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு டெஸ்லாவின் பங்குகள் கூடி, வெள்ளிக்கிழமை மட்டும் 3.8 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்கின் செல்வாக்கு நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் ஒரு பின்னணியை உருவாக்கியுள்ளது.

Bloomberg Billionaires Index தகவலுக்கமைய, டெஸ்லாவின் மிகப்பெரிய ஒற்றைப் பங்குதாரரான எலோன் மஸ்க், தேர்தல் நாளிலிருந்து தோராயமாக 83 பில்லியன் டொலர் மேலதிகமாக தனது வருமானத்தில் சேர்த்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!