செய்தி

களுத்துறையில் ரயில் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி!! இளைஞரை தீவிரமாக தேடும் பொலிஸார்

களுத்துறை தெற்கு காலி வீதியின் பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் புகையிரத பாதைக்கு அருகில் காணப்பட்ட பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த காரின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி தனது 19 வயது தோழி மற்றும் மேலும் இரு இளைஞர்களுடன் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பொலிஸாரின் விசாரணையில் அவர்கள் நால்வரும் குறித்த ஹோட்டலின்அறையொன்றில் தங்கியிருந்து அங்கு மது அருந்தியமை தெரியவந்துள்ளது.

பின்னர் 19 வயது சிறுமி ஒரு இளைஞனுடன் ஹோட்டலை விட்டு வெளியேறினார், அதே நேரத்தில் 16 வயது மாணவியும் மற்ற இளைஞனும் அதே ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

எனினும் விடுதிக்கு வந்த நபர் ஒருவர் புகையிரத பாதைக்கு அருகில் மாணவியின் சடலத்தை முதலில் பார்த்துள்ளார்.

ஹோட்டலில் தங்கி முதலில் வெளியேறிய 19 வயது யுவதியும் இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் கார் சாரதியையும் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியுடன் ஒரே ஹோட்டல் அறையில் கடைசியாக இருந்த இளைஞனை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி