இலங்கையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிறிதொரு நாளில் பாராளுமன்றத்தை கூட்ட முடிவு!
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற நேற்று (21.11) கூடிய நிலையில், இதன்போது ஜனாதிபதி தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்துஉரையாற்றியிருந்தார்.
இதனையடுத்து பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான திகதியை தீர்மானிக்க கட்டி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆளும் தரப்பில் இருந்து 26 மற்றும் 27 ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டன.
இருப்பினும் அன்றைய தினத்தில் மாவீரர் தினத்தில் கலந்துகொள்வதற்காக சிறீதரன் செல்லவுள்ளதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.