குஜராத்தில் பகிடிவதையால் உயிரிழந்த மருத்துவ மாணவர்

குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், மூத்த மாணவர்களின் பகிடிவதையின் ஒரு பகுதியாக, மூன்று மணி நேரம் நிற்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களில் அனில் மெத்தானியாவும் ஒருவர்.
விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அவர்களை மூன்று மணிநேரம் நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்த 18 வயதான அனில் சுருண்டு விழுந்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)