டெல்லியில் காற்று மாசு: உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இந்நிலையில் டெல்லியில் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இணையவழியில் பாடங்களை நடத்தலாம் என்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு மிகவும் கவலை அளிப்பதாகவும், பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது.
பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.