டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள x தள பதிவில், வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியா – அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நம்முடைய ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.
மேலும், ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
(Visited 33 times, 1 visits today)