ஐரோப்பா

ரஷ்யாவில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

கோவிட் மற்றும் போர் ரஷ்யாவில் “பத்தாண்டுகளில் மிக மோசமான தொழிலாளர் பற்றாக்குறையை” ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறைத்  தெரிவித்துள்ளது.

இது குறித்து 14 ஆயிரம் முதலாளிகளிடம் ரஷ்ய வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வின்படி, 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2022 இல் நாட்டை விட்டு வெளியேறிய 1.3 மில்லியன் மக்களில் பலர் அதிக மதிப்புள்ள தொழில்களில் பணிப்புரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் சுமார் 10% (100,000) பேர் திரும்பி வரவில்லை என்று ரஷ்ய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரலாற்று ரீதியாக அதிக குடியேற்றம் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவது, தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணியாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இது ரஷ்ய பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டும்  எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்