கரீபியன் கடலில் உருவாகிவரும் புயல் : அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
ரஃபேல் புயல் கரீபியன் கடலில் உருவாகிவருவதாகவும் குறித்த புயலால் அமெரிக்கா பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெப்பமண்டல சூறாவளி பதினெட்டு என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் அடுத்த 36 மணி நேரத்தில் கேமன் தீவுகளைத் தாக்கக்கூடும் என்று தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் கண்காணிப்பாளர்கள் இது வார இறுதியில் அமெரிக்க வளைகுடா கடற்கரை மாநிலங்களை நோக்கி நகரும் போது வெப்பமண்டல புயலாக வலுவிழக்கக்கூடும் எனவும் முன்னுரைத்துள்ளனர்.
இதன் விளைவாக, லூசியானா, மிசிசிப்பி மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தை காணமுடியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புளோரிடாவின் தென்மேற்கு பகுதி வியாழன் முதல் சிறிய தாக்கங்களை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)