மலேசியாவில் பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 வயது இளைஞன்
மலேசியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் தனது செல்போனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பட்டர்வொர்த்தில் உள்ள பினாங்கு சென்ட்ரல் பேருந்து முனையத்தில், கோலாலம்பூருக்குச் செல்லும் விரைவுப் பேருந்தில் அவர் ஏறிய சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இளைஞன் தனது போனை சார்ஜ் செய்துள்ளார். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, பயணிகள் அவர் அலறல் சத்தம் கேட்டு, அவர் வாயில் நுரை தள்ளியதைக் கண்டனர்.
இந்த பயங்கரமான காட்சியை கண்ட சக பயணிகள் அவசர சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, 18 வயதான பாதிக்கப்பட்டவர் வந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் அறிவித்தனர்.
பிரேத பரிசோதனை பின்னர் மின்சாரம் தாக்கியதே மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது.
பேருந்து ஓட்டுநரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது, அவரது இடது கை விரல்களில் தீக்காயங்கள் இருந்துள்ளது. சார்ஜிங் கேபிள் உருகியது.
மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், சம்பவம் குறித்து விசாரணை நடத்த திணைக்களம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்குவதற்கு இரண்டு வாரங்களுக்குள் பணிக்குழுவுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.