செர்பியாவில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரி போராட்டம்!
செர்பியாவில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் செர்பிய தலைநகரில் உள்ள அரசாங்க கட்டிடங்களின் நுழைவாயிலில் சிவப்பு கைரேகைகளை விட்டு, அதிகாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பெல்கிரேடில் உள்ள நிர்மாண மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சின் இருக்கைக்கு வெளியே பல ஆயிரம் பேர், பிரதமர் மிலோஸ் வுசெவிக் உட்பட அரசாங்க அமைச்சர்களை உடனடியாக பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.





