மரத்தால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோள் – ஜப்பான் ஆய்வாளர்களின் புதிய முயற்சி
ஜப்பான் ஆய்வாளர்கள் மரத்தால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.
அது நவம்பர் 5-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
கியோடோ பல்கலைக் கழகம் சார்பில் லிக்னோசாட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள், 400 கிலோ மீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்றும் அவர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எளிதில் சிதைவடையாத மாக்னோலியா மரத்தால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் மைனஸ் நூறு முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் தீவிர வெப்பச் சூழலை மரம் எவ்வாறு தாங்கும் என ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்கால விண்வெளி ஆய்வுகளில் மரங்களைப் பயன்படுத்துதல், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளைக் கட்டுதல் போன்ற திட்டங்களின் அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.