இலங்கையின் கடந்த கால கசப்பான வரலாறு தேர்தலுடன் நிறைவுக்கு வரும்!

வேலைநிறுத்தங்களின் கசப்பான வரலாறு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் முடிவடையும் என NPP வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தொடர் வேலைநிறுத்தங்களால் நாடு விரும்பத்தகாத அனுபவத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அரசுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 14 தேர்தலுக்கு பிறகு வேலைநிறுத்தங்கள் குறித்தும், ஊரடங்குச் சட்டம் குறித்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய ஒரு பாடமாக மாத்திரமே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)