ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஆஸ்திரேலியதவின் வானிலை ஆய்வுப் பணியகம் (BoM) மற்றும் CSIRO ஆகியவற்றால் வெளியிடப்பட்ட காலநிலை 2024 அறிக்கை காலநிலை மாற்றம் தொடர்பான சில ஆபத்தான நிலைமைகளை கண்டுபிடித்துள்ளது.
புவி வெப்பமடைதல் அபாயத்தைக் குறைக்க கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பசுமை இல்லவாயு வெளியேற்றத்தை வெற்றிகரமாகக் குறைத்த 26 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும், மேலும் ஆஸ்திரேலியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2005 உடன் ஒப்பிடும்போது 28.2 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
1910 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.51 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 33 நாட்களுக்கு நாட்டின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ நிலைமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.