ஐரோப்பா

ரஷ்யாவில் வடகொரிய இராணுவத்தினர் பயிற்சி- ஜெலன்ஸ்கி விடுத்த எச்சரிக்கை

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா ராணுவத்தினரை ஈடுபடுத்தும் ரஷ்யாவின் முடிவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வடகொரியாவுடன் ரஷ்யா வெளிப்படையாகக் கூட்டு வைத்துக்கொண்டு ஆயுதங்களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கிக் குவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் எல்லையில் 3 ஆயிரம் வடகொரிய ராணுவத்தினருக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் அவர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபடுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சீனா, உக்ரைனுக்கு எதிராக வடகொரிய ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!