இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மழையுடன் கூடிய மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)