ஜனாதிபதியின் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவிட்ட தேர்தல் ஆணையகம்

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு பயிர்ச் செய்கைக்காக வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய காணி விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் காணி உதவி ஆணையாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
11,000 ஏக்கர் காணியை தற்காலிகமாக பயிர்ச் செய்கைக்காக மக்களுக்கு வழங்க ஜனாதிபதி அண்மையில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் கந்தளாய் காணி அலுவலகம் அது தொடர்பான விண்ணப்பப் படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கி வந்தது.
ஆனால், பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)