ஜெர்மனியில் மாயமாகும் கார்கள் உட்பட முக்கிய பொருட்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
ஜெர்மனியில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஏற்கனவே பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் நூதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிநவீன கார்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சூட்சுமான முறையில் திருடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி நிலையங்களை குறித்து வைத்து இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்பயிற்சி நிலையங்களுக்கு வரும் பணக்காரர்களின் கார்கள் மற்றும் பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடற்பயிற்சி நிலையங்களில் வாடிக்கையாளர்களாக பதிவு செய்யும் சிலர் இவ்வாறான திருட்டில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஸன், டியுரன், மெட்பன், ராட்டிங்கன் போன்ற நகரங்களில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஏற்கனவே கையடக்க தொலைபேசி, வங்கி அட்டைகள் மூலம் திருட்டு சம்பவங்கள் அதிரித்துள்ள நிலையில், தற்போது புதிய முறையிலான திருட்டு குறித்து மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.