செய்தி விளையாட்டு

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் கிண்ணம் சிங்கப்பூர் வசமானது – வாய்ப்பை இழந்தது இலங்கை

ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை 64–67 என்ற புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது.

இறுதிப் போட்டி வரை தோல்வியுறாத அணியாக முன்னேறிய இலங்கை, நேற்று (27) இந்தியாவின் பெங்களூர் நகரில் உள்ள கொரமங்கலா உள்ளக அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு கடும் சவால் கொடுத்தது.

முதல் கால் பகுதியில் இரு அணிகளும் சரிசமமாக கோல்கள் போட்ட நிலையில் சிங்கப்பூர் அணியால் 17 – 14 புள்ளிகளால் முன்னிலை பெற முடிந்தது.

எனினும் இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் தவறுகளை சரி செய்து ஆடிய இலங்கை அணியினரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. இந்தக் கால்பகுதியில் இலங்கை அணியால் 15 புள்ளிகளைப் பெற முடிந்ததோடு சிங்கப்பூர் வீராங்கனைகள் அந்தக் கால் பகுதியில் 11 புள்ளிகளைப் பெற்று பின்தங்கியது.

எனினும் முதல் கால் பகுதியில் அதிக புள்ளிகளைப் பெற்றதால் சிங்கப்பூர் அணி முதல் பாதி ஆட்டத்தில் 28–27 புள்ளிகளால் முன்னிலை பெற்றது.

என்றாலும் மூன்றாவது கால்பகுதியில் இலங்கை வீராங்கனைகள் ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றினர்.

இதன்போது இலங்கை வீராங்கனைகள் 15 புள்ளிகளை வென்ற நிலையில் சிங்கப்பூர் அணி 11 புள்ளிகளையே பெற்றது.

ஆட்டத்தின் மூன்றாவது கால் பகுதி முடிவின்போது இலங்கை அணி 42–39 என முன்னிலை பெற்றது. எவ்வாறாயினும் கடைசி கால்பகுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியின் கையோங்கியது.

அந்த சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனைகள் 13 புள்ளிகளைப் பெற்றனர். ஆனால் இலங்கை வீராங்கனைகள் 10 புள்ளிகளையே பெற்றனர்.

இதனால் இரு அணிகளினதும் புள்ளிகள் 52–52 என சமநிலை பெற்றது.

இதனால் போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதற்கு இரு அணிகளும் மேலதிக நேரத்தில் ஆட வேண்டி ஏற்பட்டது.

இதனால் நடத்தப்பட்ட மேலதி நேரத்திலும் இரு அணிகளும் தலா 7 புள்ளிகளைப் பெற்றதால் மீண்டும் ஆட்டம் 59–59 என சமநிலை பெற்றது.

எனினும் இரண்டாவது மேலதிக நேரத்தில் முடிவை மாற்றி சிங்கப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இதன்போது சிங்கப்பூர் அணி 8 புள்ளிகளைப் பெற்றதோடு இலங்கை வீராங்கனைகளால் 5 புள்ளிகளையே பெற முடிந்தது.

இதன்மூலம் சிங்கப்பூர் அணி 67 – 64 என்ற புள்ளிகளால் வெற்றியீட்டி ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது.

சிங்கப்பூர் அணி ஆசிய கிண்ணத்தை வென்றது இது நான்காவது முறையாகும்.

எனினும் அந்த அணி பத்து ஆண்டுகளில் சம்பியனாவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இலங்கை அணி 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை சம்பியன் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பு பறிபோனது.

எனினும் இலங்கை அணி ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.

எனினும் இலங்கை வலைப்பந்து அணி முன்னர் ஆறு முறை ஆசிய சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி ஆரம்ப சுற்றில் பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைதீவுகள் அணிகளை இலகுவாக வீழ்த்தியதோடு நேற்று முன்தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியை தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி