ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் உயிரிழந்த இந்தியர்!

வடக்கு பிரான்சில் சுமார் 40 வயதுடைய இந்தியர் ஒருவர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று கலேஸுக்கு மேற்கே சுமார் 15 மைல் (25 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள டார்டிங்ஹென் நகரத்திலிருந்து தங்கள் சிறிய படகு பயணத்தை தொடங்கியதாக பிரஞ்சு பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
(Visited 33 times, 1 visits today)