பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் : விசாரணையில் வெளிவந்த தகவல்!

பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பிரித்தானிய பொலிஸார் இராஜதந்திர விலக்கு காரணமாக உயர்ஸ்தானிகரின் வீட்டிற்குள் நுழையவில்லை என்று இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை முறைப்பாடு செய்த நபர் அவசரகடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
(Visited 76 times, 1 visits today)