அடுத்த ஆண்டு முதல் இ-சிகரெட்டுகளை தடை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய வேப்ஸை தடை செய்யும் என்று ஒரு அரசாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தீங்கு மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பயன்பாட்டின் அளவைக் கட்டுப்படுத்த இந்த தடை விதிக்கப்பட்டுளள்து.
சுகாதார அதிகாரிகள் இளைஞர்களிடையே வேப்ஸின் பயன்பாடு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
ஹெல்த் தொண்டு நிறுவனமான ASH 2024 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி, 11-17 வயதுடைய ஐந்து குழந்தைகளில் ஒருவர் இதனை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
நிகோடின் கொண்ட இ-சிகரெட்டுகளை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பது அல்லது 18 வயதுக்குட்பட்டவர்கள் சார்பாக பெரியவர்கள் வாங்குவது சட்டவிரோதமானது.
டிஸ்போசபிள் வேப்ஸைத் தடை செய்யும் திட்டம் ஆரம்பத்தில் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது ஆனால் ஜூலை தேர்தலுக்கு முன்னர் செயல்படுத்தப்படவில்லை.