10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா
டாக்காவில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்தது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 308 ஓட்டங்கள் எடுத்தது. வெர்ரெயன்னே 114 ஓட்டங்கள் எடுத்தார்.
டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 307 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மெஹிதி ஹசன் 97 ஓட்டங்கள் விளாசினார்.
காகிஸோ ரபாடா (Kagiso Rabada) 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து 106 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
டோனி டி ஸோர்சி 41 (52) ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 30 (37) ஓட்டங்களும் எடுத்தனர். டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆசிய மண்ணில் 2014ஆம் ஆண்டுக்கு பின் தென் ஆப்பிரிக்க அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்