தோனிக்கு பதிலாக சிஎஸ்கேக்கு வருகிறாரா ரிஷப் பண்ட்?
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் கடந்த சீசனை போல் பல மாற்றங்களை சந்திக்க போகிறது. ஏனென்றால் மெகா ஏலத்தின் மூலம் பல அணிகளில் விளையாடிய பல வீரர்கள் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
எப்படி கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாறியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ, அதேபோல் தற்போது சீசனில் பல கேப்டன்கள் வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே லக்னோ அணியிலிருந்து கே எல் ராகுல் விலக போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
அதாவது டெல்லி கேப்பிட்டல் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ரிஷப் பந்த் அந்த அணியில் இருந்து விலக போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.
அதாவது டெல்லி அணியில் தற்போது புதிய நிர்வாகம் புகுந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் உள்ளிட்ட பலரும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்று விட்டார். இதனால் ரிஷப் பண்டும் டெல்லி அணியில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே சென்னை அணிக்கு ரிஷப் பன்ட் வரப் போகிறார் என்ற செய்தி வெளியான போது அதனை கங்குலி திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.
ஆனால் தற்போது டெல்லி அணியில் பல மாற்றங்கள் நடப்பதால் ரிஷப் பந்த் தன்னுடைய பெயரை ஏலத்தில் கொடுக்க போகிறார்.
இதன் காரணமாக தோனிக்கு பதில் ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் பண்ட், டெல்லி அணியில் கேப்டனாக செயல்படக் கூடியவர்.
இதனால் தான் மற்ற அணிகளுக்கு வந்தால் கேப்டன் பதவி தமக்கு தான் கொடுக்க வேண்டும் என்று கூறுவார். ஆனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.
இதனால் பண்ட், சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும்.
ஒரு வேலை ருதுராஜ் ஒப்புக்கொண்டால் பண்டை கேப்டனாக மாற்றி விட்டு தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பரை சிஎஸ்கே கண்டுபிடித்து விடும்.
அதேவேளையில் ரிஷப் பண்டை அவ்வளவு எளிதாக சிஎஸ்கே வாங்க முடியாது. ஏனென்றால் பஞ்சாப், ஆர்சிபி போன்ற அணிகள் ரிஷப் பண்டை வாங்கி கேப்டனாக ஆக்க முயற்சி செய்து வருகிறது.