அஸ்வின் மாபெரும் வரலாற்று சாதனை..
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தினார்.
அதன் மூலம் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் டெஸ்ட் போட்டிகளில் 530 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் 3 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின் 531 விக்கெட்களுடன் அவரை முந்தி இருக்கிறார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.
புனே டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 189 விக்கெட்கள் வீழ்த்தி இதிலும் நாதன் லியோனை முந்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
கடந்த 2019 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 43 போட்டிகளில் 78 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 187 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார்.
அஸ்வின் அவரை முந்த முடியாமல் இருந்தார். ஏனெனில், லியோனை விட அஸ்வின் குறைந்த போட்டிகளிலேயே ஆடி இருந்தார். ஆனால், இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் என அஸ்வின் வரிசையாக போட்டிகளில் விளையாடி வந்தார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் நாதன் லியோனை முந்தி இருக்கிறார் அஸ்வின்.
இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 39 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் விளையாடி 189 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின்.
நாதன் லியோனை விட 417 ஓவர்கள் குறைவாக வீசி இருக்கும் அஸ்வின் அவரைவிட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி இருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடும் அஸ்வின் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத இருக்கிறார்.
அப்போது நாதன் லியோனுக்கும், அஸ்வினுக்கும் நேரடி போட்டி இருக்கும்.