உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் உள்நாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டன் நியமி்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான உத்தரவை, அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.

இது கரு்த்து வெளியிட்டுள்ள ஜோ பைடன்,  பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்புஇ குடியேற்றம்இ கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார். நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார்.

பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும்,  அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன். நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி