இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
 
																																		இலங்கையில் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் கருத்துரைத்தவர்கள், தற்போது மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேர தெரிவித்துள்ளார்.
(Visited 64 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
