இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் என சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களிலும் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
(Visited 74 times, 1 visits today)





