Instagram, WhatsApp ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்த Meta நிறுவனம்
Meta நிறுவனம் Instagram, WhatsApp, Reality Labs ஆகியவற்றில் பணிபுரிந்த ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்திருக்கிறது.
The Verge அது பற்றித் தகவல் வெளியிட்டுள்ளது. தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி the Verge அந்தத் தகவலைத் தந்தது.
நிறுவனத்தின் நீண்டக்கால உத்திபூர்வ இலக்குகளை அடைய வேண்டும் எனும் நோக்கத்தில் சில குழுக்களில் மாற்றங்கள் செய்வதாக Meta நிறுவனத்தின் பேச்சாளர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆட்குறைப்புச் செய்யப்படும் ஊழியர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகளைத் தேடித் தர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
எத்தனை ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் எனும் விவரம் வெளியிடப்படவில்லை.
அது சிறிய எண்ணிக்கைதான் என்று the Verge தெரிவித்துள்ளது. Meta நிறுவனமும் எத்தனைப் பேர் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று விவரம் தரவில்லை.