இலங்கை வந்த வெளிநாட்டவரை நாடு கடத்திய அதிகாரிகள்
																																		இத்தாலி பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அது, குடிவரவுத் துறை அதிகாரிகளால். அவர் 40 வயதான ஈரானிய பிரஜை எனவும், மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இத்தாலிய கடவுச்சீட்டு குறித்த தகவல்களை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தேசிய மத்திய பணியகத்திற்கு அனுப்பி வைக்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தாலியின் தேசிய கடவுச்சீட்டு என்பது சர்வதேச பொலிஸ் தகவல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கடவுச்சீட்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஈரான் பிரஜை நாட்டிற்குள் பிரவேசித்து பின்னர் ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
        



                        
                            
