குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (06) மேலும் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கே உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
(Visited 4 times, 1 visits today)