கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கையில் முரண்பட்ட கருத்து
இஸ்ரேலின் ஹைபா Binyanina நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் கோளான் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும் எண்ணிக்கையான இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தகவல்களுக்கு இணங்க 4 இராணுவ வீரர்கள் பலியாகியதாகவும் 79 இராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும் IDF இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளின் பிரகாரம் 39 இராணுவ வீரர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தாக்குதலின் பொறுப்பினை ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன் லெபனான் தாக்குதலுக்கான முதலாவது எச்சரிக்கை தாக்குதலாகவும் இத்தாக்குதல் வர்ணிக்கப்பட்டுள்ளது.
எதிரிகளின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கான சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு கட்டைமைப்பு இஸ்ரேலில் ஸ்தாபிக்கப் பட்டுள்ள நிலையில் அவற்றையும் மீறி துல்லியமாக இராணுவம் முகாம் தாக்கப்பட்டமை குறித்து IDF அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
இஸ்ரேலின் ராடர் மற்றும் அயன்டோம் உயர் தொழில் நுட்பங்களையும் ஏமாற்றி பல டஜன் வீரர்கள் கொல்லப் பட்டுள்ளமை குறித்து IDF ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.