காசாவுக்கு இரண்டு வாரங்களாக உணவு கிடைக்கவில்லை
சுமார் இரண்டு வாரங்களாக காஸாவுக்கு உணவு கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமையே இதற்குக் காரணம்.
அதன்படி, உணவு, தண்ணீர் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்குமாறு இஸ்ரேலிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
தற்போது காஸா பகுதியில் ஏராளமான குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.





