நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் TikTok
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதால் TikTok சமூக ஊடக நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கவிருக்கிறது.
எனினும் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்ற தகவலை TikTok சொல்லவில்லை. மலேசியாவில் 500க்கும் குறைவான ஊழியர்கள் பாதிக்கப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
காணொளி உள்ளடக்கத்தை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆள்குறைப்புச் செய்யப்படுவதாக TikTok பேச்சாளர் கூறினார்.
தற்போது விதிகளை மீறும் 80 சதவீதம் காணொளிகளைத் தானியக்கத் தொழில்நுட்பமே அடையாளம் கண்டு அகற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





