இரு பௌத்த தேரர்களை களமிறக்கிய இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி!
முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரு பௌத்த தேரர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளது.
பௌத்த பிக்குகளான வணக்கத்துக்குரிய கிரிபனாரே விஜித தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்தேன் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் ஒரே முயற்சியே தவிர, நாங்கள் பதவிகளின் பின்னால் செல்லவில்லை. நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்”என்றும் விஜித தேரர் தெரிவித்துள்ளார்.





