செய்தி

கொலராடோ தங்கச் சுரங்க சுற்றுலா தளத்தில் நேர்ந்த விபரீதம்: ஒருவர் பலி! 23 பேர் மீட்பு

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஆபத்தான நிலையில் இருந்த 23 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலராடோ தங்கச் சுரங்கம் தற்போது தனியாருக்குச் சொந்தமான சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

கிரிப்பிள் க்ரீக் நகருக்கு அருகில் உள்ள மோலி கேத்லீன் தங்கச் சுரங்கத்தில் லிஃப்ட் இறங்கிக் கொண்டிருந்தபோது, ​​மேற்பரப்பில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, “பங்கேற்பாளர்களுக்கு கடுமையான ஆபத்தை” உருவாக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

12 பேரைக் கொண்ட இரண்டு சுற்றுலா பயணக் குழுக்கள் தங்கச் சுரங்கத்தினுள் இருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அதில் ஒரு குழுவினர் 6 மணி நேரத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தக் குழுவில் சிறுவர்களும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மற்றொரு குழுவினர் அந்தத் தங்கச் சுரங்கத்தின் அடிப்பகுதியில் சிக்குண்டிருந்த போதிலும், பல மணி நேரத்தின் பின்னர் பாதிப்பின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!